வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அதையடுத்து, பிரபாஸின் சலார் 2 படத்தில் நடிக்கப் போகிறார். ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அது இப்போது கூலி படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இந்த படத்தில் ரஜினி சாருடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதோடு, அவரிடத்தில் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன் என்றார்.
திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். காதலிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஆனால் யாருடனாவது என்னை இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த நபரை இதுவரை நான் சந்திக்கவில்லை. அதன் காரணமாக திருமணத்தை பற்றி இதுவரை நான் யோசித்துப் பார்க்கவில்லை. அதோடு எனக்கு இப்போதைக்கு திருமணத்தில் ஆர்வமும் இல்லை என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.