‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

அரசியலில் நேர்மை என்கிற பெயருக்கு இலக்கணமாக இன்று வரை பயணித்து வருபவர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் முக்கியமானவரும் மூத்தவருமான நல்லகண்ணு. எந்த ஒரு அரசியல்வாதியும் கூட இவர் மீது ஒரு சிறு துளி குற்றச்சாட்டையோ அவதூறையோ இதுவரை கூறியது இல்லை. அந்த அளவிற்கு தன்னுடைய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டவர். நேர்மையான அரசியல் நடத்தி வரும் அவர் தற்போது 100 வயதை தொட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அரசியல் சார்ந்தவர்களிடமிருந்து மட்டுமல்லாமல் திரை உலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரிடமிருந்தும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இவரை நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறி ஆசி பெற்று வந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.




