ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி. இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதால் ஆனந்த ராகம் தொடரில் இருந்து சங்கீதா வெளியேறியதாக செய்திகள் வெளியான போதும் அதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது தங்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதை நடிகை சங்கீதா ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளார். அதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.