இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த இரண்டாம் பாகத்தில் சூரியை விட விஜய் சேதுபதிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதில் அவரது மனைவியாக ஒரு சமூக போராளியாக நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் டைரக்ஷனில் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, “கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தபோது பழைய சோறு வைத்திருந்தார்கள். ஆர்வமாக சாப்பிடலாம் என நினைத்தபோது அங்கே சற்று தள்ளி தூரத்தில் மஞ்சு வாரியர் தன் குழுவினருடன் நின்று கொண்டிருந்தார். நாமாக போய் பேசலாமா, நம்மை அவருக்கு அடையாளம் தெரியுமா என்று தயக்கத்துடன் நான் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
ஆனால் சில நிமிடங்களில் அவரே என்னைப் பார்த்துவிட்டு நேரடியாக தேடி வந்து என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். அவர் என்னையெல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அன்றுதான் முதன்முறையாக அறிமுகமானோம். ஆனால் அன்று இரவே துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவரது கையால் நான் விருது பெற்றேன் என்பதும் இன்னொரு ஆச்சர்யம் தான். கிட்டத்தட்ட இது நடந்து ஏழு வருடம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.