Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா

12 டிச, 2024 - 12:26 IST
எழுத்தின் அளவு:
We-are-not-arch-enemies.-But...-Nayanthara-opens-up-about-Dhanush


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த 2022ம் ஆண்டு இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா குறித்த ஆவணப்படமான ‛நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த நவ.,18ல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த, 'நானும் ரவுடி தான்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையிலான காதல் இப்படத்தின்போது தான் ஆரம்பமான நிலையில், அது குறித்தான காட்சிகளை ஆவணப்படத்தில் வைத்திருந்தனர்.

ஆனால், அதற்கான அனுமதியை அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வழங்கவில்லை. தன் அனுமதியில்லாமல் காட்சிகளை வைத்ததற்காக ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் கோபமடைந்த நயன்தாரா, தனுஷ் குறித்து மிகவும் காட்டமான வார்த்தைகளுடன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்த விவகாரத்தால் தனுஷ் - நயன்தாரா இடையிலான நட்பு முறிந்தது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு நயன்தாரா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பப்ளிசிட்டிக்காக ஒருவரது இமேஜை அழிக்கும் ஆள் நான் அல்ல. படத்தின் விளம்பரத்துக்காகவும் நான் அப்படி செய்யவில்லை. அது என்னுடைய நோக்கமே கிடையாது. அவரது நண்பர்கள், மேனேஜர் ஆகியோருக்கு ஏராளமான முறை தொலைபேசியில் அழைத்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. 'நானும் ரவுடிதான்' படத்தில் விக்னேஷ் எழுதிய நான்கு வரிகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்த விரும்பினோம். அது எங்களுக்கு மிகவும் பெர்சனலான ஒன்றாக இருந்தது. அது இந்த ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்பினோம்.

அதற்காக நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த 4 வரிகளும் எங்கள் வாழ்க்கையுடன் தொடர்புடையது. தனுஷ்தான் அவற்றுக்கு முதலில் ஓகே சொன்னவர். நாங்கள் அப்போது நல்ல நண்பர்களாக இருந்தோம். நாங்கள் ஒன்றும் பரம எதிரிகள் கிடையாது. எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே, எப்படி எல்லாம் மாறியது என்று தெரியவில்லை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவருக்கென்று சில காரணங்கள் இருக்கலாம். அதைப் போல எனக்கும் சில காரணங்கள் இருந்தது.

நீங்கள் எனக்கு அந்த நான்கு வரிகளுக்கான அனுமதி தரவில்லை என்றாலும் பரவாயில்லை. அது அவரது உரிமை. ஆனால் என்னோடு போனில் பேச மட்டும் சொல்லுங்கள். அதன் மூலம் என்ன பிரச்னை, எங்கள் மீது என்ன கோபம் என்று புரிந்து கொள்ளலாம் என்று அவரது மேனேஜரிடம் கூறினேன். அவரை சுற்றி உள்ளவர்கள் ஏதேனும் சொல்கிறார்களா? அப்படி ஏதாவது இருந்தால் அதை பேசி சரிசெய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர், நிறைய பேரால் நேசிக்கப்படுபவர். அதே அன்பும் மரியாதையும் நாங்களும் அவர் மீது வைத்திருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு பிரச்னை வரும்போது நான் முன்வந்து பேச வேண்டியிருந்தது. இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம்5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் ... சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)