வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
தமிழ்நாட்டில் உள்ள பெப்சி உள்பட இந்தியாவில் உள்ள திரைப்பட சங்கங்கள் அனைத்தும் இணைந்துள்ள அமைப்பு 'இந்திய திரைப்பட கூட்டமைப்பு'. (பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா) இதில் 18 ஆயிரம் திரைப்பட தயாரிப்பாளர்கள், 20 ஆயிரம் விநியோகஸ்தர்கள், 12 ஆயிரம் ஸ்டுடியோ உரிமையாளர்கள் உறுப்பினராக உள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம் இந்திய சினிமாவினை உலக தரத்திற்கு மேம்படுத்துவதே ஆகும்.
இந்த அமைப்பின் செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இதில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளருமான ஐசரி கணேஷ் இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தராக இருப்பதுடன் தமிழில் பிரபல தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தேவி, போகன், எல்கேஜி, கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு, வெந்து தணிந்தது காடு, சிங்கப்பூர் சலூன், ஜோஸ்வா இமைபோல் காக்க உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.