32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 45வது படத்தின் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
கடந்த சில நாட்களாகவே இப்படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகுவார் என்ற தகவல் வந்து கொண்டிருந்தது. இப்படத்திலிருந்து ரஹ்மான் திடீரென விலகவில்லையாம். அவரை ஒப்பந்தம் செய்யும் போதே தனக்கு நிறைய படங்கள் இருப்பதாகவும், அதனால், இப்படத்தில் பணிபுரிய வாய்ப்பில்லை என்றே சொன்னாராம். இருப்பினும் அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
இதனிடையே, அவருடைய திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டதால் அவர் விலகுகிறேன் என்று சொன்னதும் தயாரிப்பு நிறுவனமும் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தகவல். ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களை முடித்துக் கொடுக்க மட்டுமே ஏஆர் ரஹ்மான் தற்போது முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். புதிய படங்களை தற்போதைக்கு ஏற்க அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.