ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் முதன்முறையாக இணைந்து புதிய படத்தில் நடித்து வந்தனர். இதில் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களைக் தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கின்றார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ' டூரிஸ்ட் பேமிலி' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் டீசருடன் அறிவித்துள்ளனர். இந்த டீசரே அசத்தலாக உள்ளது.
இலங்கையில் இருந்து சசிகுமார், சிம்ரன் மற்றும் அவரது இரு மகன்கள் ஆகியோர் இரவோடு இரவாக குடும்பத்தோடு வேறு ஒரு இடத்திற்கு செல்ல தயாராகும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி உள்ளனர். சசிகுமார், சிம்ரனின் இலங்கை தமிழ் மற்றும் காட்சியோடு வரும் நகைச்சுவை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.




