பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் பஹத் பாசிலுக்கு திருப்புமுனை தந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் தான் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாள படங்களில் மளமளவென முன்னேறியவர், தொடர்ந்து தமிழில் 'சூரரைப்போற்று', சமீபத்தில் வெளியான 'ராயன்' உட்பட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். ஆனாலும் மலையாளத்தில் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் பிரபலமில்லாத கதாநாயகர்கள் என்றாலும் கூட கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிக்கவும் அவர் தவறுவதில்லை.
அந்த வகையில் தற்போது 'ருத்ரம்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இந்த படத்தை இயக்குனர் ஜிஷோ லான் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி.ஷெட்டி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 13ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் முறையாக ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. சவாலான கதாபாத்திரம் என்பதால் இதற்கு தேவையான முன் பயிற்சிகளையும் அவர் எடுத்துக் கொண்டார்.
அப்படி கொடுக்கப்பட்ட பயிற்சிகளை வீட்டில் ரிகர்சல் செய்து பார்ப்பதற்கு அவர் பயன்படுத்திய நபர் வேறு யாருமல்ல.. அவருடைய தந்தை தான்.. பயிற்சி எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்ததுமே தன் தந்தையை அழைத்து தான் பயிற்சி எடுத்த ஆக்சன் காட்சிகளை அவரிடம் செய்து காட்டுவார். தந்தையும் வேறு வழி இன்றி கொஞ்சம் பயத்துடனே மகளின் ஆக்சன் காட்சிகளை எதிர்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமாளித்துள்ளார்.
நல்ல வேளையாக எனக்கு ரிகர்சல் செய்வதற்கு இப்படி ஒரு தந்தை கிடைத்தது வசதியாக போய்விட்டது என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி. அது மட்டுமல்ல தனது தந்தை தன்னிடம், “மகளே இந்த ஒரு ஆக்சன் படம் மட்டும் போதும்.. இனிமேல் வேறு எந்த ஆக்சன் படங்களையும் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதே” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதாகவும் சிரிப்பை அடக்க முடியாமல் கூறியுள்ளார் அபர்ணா பாலமுரளி.