சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் அவரது எக்ஸ் சமூக வலைதள கணக்கை நேற்று திடீரென டீஆக்டிவேட் செய்துள்ளார். நடிகை நயன்தாரா குறித்த 'நயன்தாரா - பியான்ட் த பேரிடேல்' டாகுமென்டரி வெளியாவதற்கு முன்பாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அப்போது தனுஷ் பற்றி சில தேவையற்ற பதிவுகளை இன்ஸ்டா தளத்திலும் போட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அதற்கு உடனடியாக தனுஷ் ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். அப்போது முதலே விக்னேஷ் சிவனின் எக்ஸ் தளம், மற்றும் இன்ஸ்டா தளங்களில் அவரை அதிகமாக கமெண்ட் செய்து வந்தனர்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற இயக்குனர்களின் பேட்டி இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவைப் பகிர்ந்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட இயக்காத விக்னேஷ் சிவன் எப்படி இதில் இடம் பெறலாம் என பலரும் கேள்வி கேட்டு கிண்டலடித்தனர்.
இப்படி அடுத்தடுத்து தன்னைப் பற்றிய விமர்சனங்கள் வருவதால் அவர் எக்ஸ் தளத்தை டீஆக்டிவேட் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனாலும், இன்ஸ்டா கணக்கை அவர் டீஆக்டிவேட் செய்யவில்லை.