50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் இரண்டாம் பாகம் ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, கொச்சி, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் வெளியான புஷ்பா 2 டிரைலரை பார்த்துவிட்டு நடிகை மாளவிகா மோகனன் அல்லு அர்ஜுனை வானளாவ புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புஷ்பாவில் அல்லு அர்ஜுன் எந்த அளவிற்கு பென்டாஸ்டிக் ஆக இருந்தார் என்பதிலேயே நான் அடித்து செல்லப்பட்டு விட்டேன். அவரது கம்பீரம், அவரது ஸ்டைல், அவரது நடனம் எல்லாமாக சேர்ந்து புஷ்பா-2வை நோக்கி ஆவலுடன் காத்திருக்க வைத்துவிட்டன. இது 'தகிடாலே டைம்' என்று கூறியுள்ளார். அவரது கமெண்ட்டுக்கு, “தேங்க்யூ டியர் அனைவருக்குமே இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று பதில் அளித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்து விட்ட மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கில் முதன்முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக ராஜா சாப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் தீவிரமாக கால் பதிக்கும் முயற்சியாக அல்லு அர்ஜுனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி அவரது கவனத்தை ஈர்க்க மாளவிகா மோகனன் முயற்சித்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.