ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 27) பொள்ளாச்சியில் துவங்கி உள்ளது. ஆனைமலை, மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா மற்றும் படக்குழுவினர் தரிசனம் செய்த பின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஆர்ஜே-வாக இருந்து காமெடி நடிகராக மாறி, கதாநாயகனாகவும், இயக்குனராகவும் உயர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. “மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம்” ஆகிய படங்களை என்ஜே சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கினார்.
அவர் முதல் முறையாக தனியாக இயக்க உள்ள படம்தான் 'சூர்யா 45'. பாலாஜி சொன்ன கதையைக் கேட்டு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு விஜய்யையும் சந்தித்து கதை சொல்லியிருந்தார் பாலாஜி. ஆனால், அந்தக் கதையில் விஜய் நடிக்க சம்மதிக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கதைதான் சூர்யா 45 கதையா என்பது பாலாஜி பின்னால் எப்போதாவது பேட்டி கொடுத்தால் தெரிய வரும்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.