'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
டிரைலரில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் உடனடியாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. டிரைலரின் முடிவில் விஜய் சேதுபதி பேசுவது போல ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது,” என்று பேசுகிறார்.
அந்த வசனம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதாக உள்ளதென நேற்று டிரைலர் வெளியான உடனேயே பலரும் கமென்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சமூக வலைதளங்களில் அந்த வசனத்தை அப்படியே பதிவு செய்து, விஜய்யை பலரும் விமர்சித்தார்கள். அதைக் கண்டு பொறுக்க முடியாத விஜய் ரசிகர்கள் பதிலுக்கு வெற்றிமாறன் பற்றி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பொதுவாக தனது திரைப்படங்களில் விஜய்தான் 'பன்ச்' வசனம் பேசுவார். அவர் அரசியலில் இறங்கியதும் அவரை விமர்சித்தும் 'பன்ச்' வசனம் வந்துவிட்டதே என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.