வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ஒரு வெற்றிப் படத்தில் நடித்த பிறகும் காணாமல் போன நடிகர், நடிகைகள் நிறைய உண்டு. இது அவ்வப்போது சினிமாவில் நடக்கும் ஒரு விஷயம். அப்படியான ஒன்று 1939ம் ஆண்டே நிகழ்ந்திருக்கிறது. மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வெற்றிப் படங்களில் ஒன்று 'சந்தனத்தேவன்'. டி.ஆர்.சுந்தரம் தயாரித்த இந்த படத்தை எஸ்.நோட்டானி இயக்கி இருந்தார். ஆர்.நாயுடு இசை அமைத்திருந்தார்.
இது ஒரு கற்பனையான சரித்திர கதை. இதில் ஜி.எம்.பஷீர் என்பவர் நாயகனாகவும், பி.பானுமதி என்பவர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர் பின்னாளில் வெற்றிகரமாக வலம் வந்த பானுமதி அல்ல. இவர்களோடு எம்.ஆர்.ராதா, பி.எஸ்.ஞானம், யூ.ஆர்.ஜீவரத்னம் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதில் நாயகன், நாயகியாக நடித்த ஜி.எம்.பஷீரும், நாயகியாக நடித்த பானுமதியும் இதற்கு பிறகு நடித்ததாக தகவல்கள் இல்லை. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகளை விட இவர்கள் அழகாக இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த எம்.ஆர்.ராதாவும், யூ.ஆர்.ஜீவரத்தினமும் பின்னாளில் வெற்றிகரமான திரைக் கலைஞர்களானார்கள்.