வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்த பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே ஆக்ஷன் படங்களாகத்தான் இருந்தது. அப்போது முன்னணியில் இருந்த இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் 'கர்ஜனை' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் இயக்கினார். இதில் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் ரஜினி நடிப்பது என்றும், மலையாளத்தில் அப்போது அங்கு ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ஜெயன் நடிப்பது என்றும் முடிவாகி இருந்தது.
படத்தின் தலைப்பு 'கர்ஜனம்'. ஜெயனும் 30 சதவிகித படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவர் 'கோழியிழக்கம்' படத்தில் நடித்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனால் ஜெயனுக்கு பதில் ரஜினியே மலையாளத்தில் நடித்தார். மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியானது. மலையாளத்தில் படம் தொடங்குவதற்கு முன் ஜெயன் நடித்த சில காட்சிகள் திரையிடப்பட்டது. என்றாலும் 3 மொழிகளிலுமே படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் ரஜினியுடன், மாதவி, கீதா, ஜெயமாலினி நடித்தார்கள். மற்ற கேரக்டர்களில் மற்ற மொழி நடிகர்கள் தனித்தனியாக நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். 3 மொழிகளிலுமே பாடல்கள் ஹிட்டானது.