'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
அட்லி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'தெறி'. அப்படம் தற்போது ஹிந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று இப்படம் வெளியாக உள்ளது.
தமன் இசையமைப்பில், தீ பாடிய, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'நைன் மடக்கா' நேற்று முன்தினம் வெளியானது. யு டியுபில் வெளியான 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் வெளியான ஹிந்திப் பாடல்களில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையையும் புரிந்துள்ளது. மற்ற தளங்களிலும் சேர்த்து மொத்தமாக 34 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடனமாடியுள்ள இப்பாடலில் கீர்த்தியின் கிளாமர் ஆடையும், அவரது நடனமும் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் இதற்கு முன்பு இரண்டு படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருந்தார் தமன். இந்தப் படத்திற்காக அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். அந்த விதத்தில் தமனின் முழுமையான முதல் ஹிந்திப் படமாக 'பேபி ஜான்' அமைந்துள்ளது.