Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளைய மகன் திருமணத்தை அறிவித்த நாகார்ஜுனா

26 நவ, 2024 - 05:52 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-2nd-son-Akhil-Akkineni-gets-engaged-to-Zainab-Ravdjee

தெலுங்கு, தமிழில் நடித்து வரும் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தவனர். அடுத்து நடிகை சோபிதா துலிபலாவை டிசம்பர் 4ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் நாக சைதன்யா.

இதனிடையே, நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் ஒரே மகனான நடிகர் அகில் திருமணத்தை சற்று முன் அறிவித்துள்ளார் நாகார்ஜுனா.

“எங்கள் மகன் அகில் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது மருமகளாக வரப் போகிறவர் ஜைனாப் ரவ்ட்ஜி.

ஜைனாபை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த இளம் தம்பதியரை வாழ்த்த எங்களுடன் இணையுங்கள். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் உங்களது எண்ணற்ற ஆசீர்வாதத்துடன் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா!முதல்முறையாக ரீ ரிலீஸ் ஆகும் குணா! நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக சைதன்யாவுக்கு ரூ.50 கோடி- நெட்பிளிக்ஸ் திருமண பேரம் நயன்தாராவுக்கு ரூ.25 கோடி; நாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
26 நவ, 2024 - 11:11 Report Abuse
தமிழன் அப்பனும் அண்ணனைப் போலவும் 2வது கல்யாணம் செய்யாமல் அனுசரித்து சேர்ந்து வாழ்ந்தால் சரி. இவனுக குடும்ப ராசி அப்படி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)