ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
நடிகை நயன்தாரா குறித்த ஆவணப்படமான 'நயன்தாரா - பியாண்ட் தி பேரி டேல்' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது. இதில் நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா துறையில் வளர்ச்சி, விக்னேஷ் சிவன் உடனான காதல், திருமணம் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. நெட்பிளிக்ஸ் தளம், நயன்தாராவின் ஆவணப்படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகனான நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த நிகழ்வில் பல்வேறு திரையுலகை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம், ரூ.50 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.