ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? |
மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகராக கடந்த சில வருடங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஜோசப் படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான கதையின் நாயகனாகவும் மாறிய அவர் தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தமிழிலும் அவருக்கு வாய்ப்பு தேடி வந்ததை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்தில் நடித்தவர், தற்போது மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள ஜோஜூ ஜார்ஜ், 'பணி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மலையாளம் தவிர்த்து தமிழிலும் வெளியாகியுள்ளது. தன் மனைவிக்கு ஒரு தீங்கை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களுக்கு கணவன் எப்படி வித்தியாசமான முறையில் பாடம் புகட்டுகிறான் என்பதை மையப்படுத்தி ஒரு வித்தியாசமான பழிவாங்கல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தக் லைப் படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்ததால் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் சென்னையில் கமலுக்கு இந்த பணி படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டியுள்ளார் ஜோஜூ ஜார்ஜ். படத்தை பார்த்த கமல் படத்தின் சிறப்புகளையும் ஜோஜூ ஜார்ஜின் டைரக்ஷன் திறமையையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.