2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
தென்னிந்திய சினிமாவில் அடுத்து முக்கியமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மற்றும் அதற்கு அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் தான். அதிலும் குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால் கேம் சேஞ்சர் படத்தின் வெற்றி ஷங்கருக்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் இந்த படத்தின் கதையை எந்த அளவிற்கு பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறாரோ அதேபோல பாடல் காட்சிகளுக்கும் வழக்கம் போல முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியுள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.
பாடல் காட்சிக்கு மட்டுமே ஒரு சிறிய படத்திற்கான பட்ஜெட்டையே செலவு செய்யக்கூடிய ஷங்கர் இந்த கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் மற்றும் நாயகி கியாரா அத்வானி ஆடிப்பாடும் விதமாக இடம்பெற்றுள்ள ஒரு பாடலை 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாக்கியுள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஜருகண்டி மற்றும் ரா மச்சான் மச்சான் ஆகிய பாடல்கள் தமனின் இசையில் வெளியாகி உள்ள நிலையில் இந்த மூன்றாவது பாடல் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.