படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக 'தி கோட்' படத்தின் 'விசில் போடு' பாடல் இருக்கிறது. அப்பாடல் 24 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் கடந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட உள்ளது.
'புஷ்பா 2' படத்தில் இடம் பெற்றுள்ள 'கிஸ்ஸிக்' பாடல் நேற்று இரவு யு டியூப் தளத்தில் வெளியானது. அதன் தெலுங்குப் பாடல் மட்டும் அதற்குள்ளாக 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அந்தப் பாடலுக்கான 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் உள்ளதால் 'விசில் போடு' சாதனையை முறிடியக்க வாய்ப்புள்ளது.
'புஷ்பா 2' டிரைலர் தற்போது தனி சாதனையைப் படைத்துள்ள நிலையில், அடுத்து இந்த 'லிரிக் வீடியோ' சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்ரீலீலா இந்த 'கிஸ்ஸிக்' பாடலுக்கு நடனமாடி உள்ளார். 'புஷ்பா' முதல் பாகத்தில் இது போன்று ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். அந்த 'ஊ சொல்றியா' பாடலையும், இந்த 'கிஸ்ஸிக்' பாடலையும் ரசிகர்கள் ஒப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.