இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர், நடிகர் என தனது முதல் படமான 'புதிய பாதை' படத்திலிருந்தே பேசப்பட்டு வருபவர் பார்த்திபன். அவரது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்கள். அதன்பின் ராக்கி என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். 1990ல் திருமணம் செய்து கொண்டவர்கள் 2001ம் ஆண்டு பிரிந்தனர். அவர்களது விவகாரத்து அப்போது திரையுலகத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பல வருடங்களாகவே தனியாக வசித்து வருகிறார் பார்த்திபன்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக நேற்றிரவு அறிவித்தார்கள். 29 வருட வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் பிரிவது திரையுலகிலும் ரசிகர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் 'பிரிவு' என்ற தலைப்பில் இன்று காலையிலேயே சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் பார்த்திபன். திரையுலகத்திலிருந்து வந்த முதல் ஆறுதல் பதிவாக அது இருக்கிறது.
“பிரிவு:
இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே…
'குடைக்குள் மழை' நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது.
பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல ,
புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப்பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே,
ஊர் விலகி 'பிரிவு' என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்''.
என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.