கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! |

2000மாவது ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படம் 'கிளாடியேட்டர்'. ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம். இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது.
தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர்' படத்தின் இரண்டாம் பாகத்தை ரிட்லி ஸ்கார் உருவாக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (15ம் தேதி) இந்தியாவில் வெளியாகிறது. ஐமேக்ஸ் மற்றும் 3டி, 4டி தொழில்நுட்பத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
சூர்யா நடித்த 'கங்குவா படம் நாளை வெளிவருகிறது. கங்குவா வெளியாகும் மொழிகள், தொழில்நுட்பங்களில் கிளாடியேட்டரும் வெளியாகிறது. கிளாடியேட்டர் உடன் மோதுவதால் கங்குவாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது படங்கள் வெளிவந்ததும் தெரிய வரும்.