அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தெலுங்கு தேசம் கட்சியையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் பிராமினி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரையும் விமர்சிக்கும் வகையில், இயக்குநர் ராம்கோபால் வர்மா சமூகவலைதளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவிட்டிருந்தார். இதை எதிர்த்து தற்போது அவர் மீது தெலுங்கு தேச கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் தற்போது ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தன்னுடைய 'வியூகம்' படத்துக்கான புரமோஷனின்போது, சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரின் ஆளுமைகளை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் கொடுத்த புகார் அடிப்படையில், பரகசம் மாவட்டத்தில் உள்ள மடிப்பாடு காவல்நிலையத்தில் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.