ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தம் போடுவதில் கடைசி வரை இழுபறி நீடித்து வந்தது. நேற்று சில முக்கியமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருந்தாலும் சில முக்கியமான சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களுடனான ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தெரிகிறது. இன்று அவற்றில் சில தியேட்டர்களுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
இருந்தாலும், ரஜினி, விஜய், கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அளவிற்கு 'கங்குவா' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வினியோகஸ்தர் தரப்பில் கறாராக நடந்து கொள்வதே அதற்குக் காரணம் என்கிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு தளங்களில் பார்த்தால் 'அமரன்' படம் எவ்வளவு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறதோ அதே அளவிற்குத்தான் 'கங்குவா' படத்திற்கான தியேட்டர்களும் இருக்கிறது. இரண்டு வாரத்தை முடிக்க உள்ள 'அமரன்' படத்திற்கான தியேட்டர் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருக்கிறது.
கனமழைக்கான அறிவிப்பு, அமரன் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பது உள்ளிட்ட விஷயங்கள் தியேட்டர்காரர்களை யோசிக்க வைக்கிறதாம். 'வேட்டையன்' படத்துடன் மோத வேண்டாம் என பின் வாங்கியது பரவாயில்லை. அதே சமயம் தீபாவளிக்கு 'கங்குவா' படத்தை வெளியிட்டிருக்கலாம். தனி வெளியீடாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது வெளியிடுவது ஒரு தவறான ரிலீஸ் என திரையுலகினரின் கருத்தாக உள்ளது. மழையின் தாக்கம் 'கங்குவா' படத்தை பாதிக்குமா என்ற அச்சத்தில் படத்தைத் திரையிடும் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம்.