வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சூர்யா நடித்து நாளை மறுநாள் வெளியாக உள்ள 'கங்குவா' படத்தின் வெளியீட்டிற்கு எதிராக மூன்றாவதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் அவர்களுக்குத் தரவேண்டிய கடன் தொகையை 'கங்குவா' தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் வழங்கி அந்த வழக்கை முடித்து வைத்தது.
அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தொடர்ந்த ஒரு வழக்கில் நாளைக்குள் 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது வழக்காக பியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனம், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த ஒரு வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கோடியே 60 லட்ச ரூபாயை உயர்நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த பிறகே 'கங்குவா' படத்தை வெளியிட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
தங்களிடமிருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கிய கடன் தொகையை, 18 சதவீத வட்டியுடன் சேர்த்து மொத்தம் 11 கோடி ரூபாய் கேட்டு பியூல் டெக்னாலஜி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்களிடமிருந்து பெற்ற தொகையில் 5 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்கிவிட்டதாம். மீதி தர வேண்டிய அசல் தொகையான 1 கோடியே 60 லட்ச ரூபாயைத்தான் நாளைக்குள் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்து வழக்குகளால் 'கங்குவா' படத்திற்கு சிக்கல் வருவதை அடுத்து, இன்னும் எத்தனை பேரிடம் கடன் வாங்கியுள்ளீர்கள் என அப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.