வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

தமிழ் சினிமாவில் 'மாநகரம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' என தொடர்ச்சியாக ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து சாதனை புரிந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்க 'கூலி' படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படத்தை அவர் இயக்குவார் எனத் தெரிகிறது. அதற்கடுத்து பிரபாஸ் நடிக்க உள்ள பான் இந்தியா படத்தை இயக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
'கேஜிஎப் ' படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து பிரபாஸ் நடிக்க மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க 'சலார் 2' ஒரு படம்; அது 2026ல் வெளியாகும்.
அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க ஒரு படம், 'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு படம் என அந்த மூன்று படங்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரபாஸை நேரில் சந்தித்து கதை சொல்லி லோகேஷ் ஏற்கனவே சம்மதம் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம்.