இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. இதில் சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இன்று கமல்ஹாசன் பிறந்த தினத்தையொட்டி ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படம் அடுத்த வருடம் ஜூன் 5ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், கமலின் விக்ரம் படம் 2022ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வீடியோ
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பனி மலைமீது கமல் நடந்து செல்லும் காட்சியும், பின்னர் மலையின் உச்சியில் அவர் நிற்கும் காட்சியும் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. பின்னர் கமல் வயதான, அதே நேரத்தில் வெறித்தனமான ஒரு வேகத்துடன் எதிரிகளும் மோதும் காட்சி ஒன்று 'விஸ்வரூபம்' படத்தின் சண்டை காட்சியை நினைவூட்டும் வண்ணம் இடம் பெற்றுள்ளது. பின்னர், தாடி மீசை இல்லாமல் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து 'வேட்டையாடு விளையாடு' ஸ்டைலில் கமலின் லுக்கோடு முடிகிறது சிறப்பு வீடியோ.
இதற்கு இடையில் ஒரு ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிம்பு ஆடும் காட்சியும், ரத்த கறை படிந்த சட்டையுடன் அவர் பாய்ந்து வரும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.