இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆனது. இதனால் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடித்து வந்தார்.
அதன் பிறகு அஜித் குமார் கடந்த மாதத்தில் விடாமுயற்சி படத்தில் மீதமுள்ள காட்சிகளை நடித்து கொடுத்தார். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளதாம். மறுபக்கம் இதன் டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற நவம்பர் 10ம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.