மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதிலேயே தசை சிதைவு என்ற அரியவகை நோய் இருக்கிறது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டது. இதனால் சித்த வைத்தியம் மூலம் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன் தன்னுடைய மகன் விருப்பத்திற்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
தனுஷூக்கும், திருநெல்வேலி மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் இன்று (நவ.,7) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி காலை 8:10 மணிக்கு நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, நடன இயக்குனர் கலா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
![]() |