நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த இரண்டு படங்களிலுமே ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பணியாற்றி இருக்கிறார். இந்த படங்கள் குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் மட்டுமின்றி சீதோஷ்னம் காரணமாக மாதக்கணக்கில் படப்பிடிப்பை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், விடாமுயற்சி படத்தை பொருத்தவரை அஜித்தை புதிய வடிவில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதையிலும் ஆக்ஷனிலும் எந்தவித காம்பிரமைசும் செய்யாமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிஜமாலுமே விபத்து ஏற்பட்ட போதும், அந்த விபத்தையும் ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம். அதேபோல் குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொண்டால், அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடியாக கமர்சியல் படமாக இருக்கும். பில்லா படத்திற்கு பிறகு ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த படத்தில் அஜித்தை பார்க்கலாம். விடாமுயற்சியை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.