குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
அட்லி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க 2016ல் வெளிவந்த படம் 'தெறி'. அப்படம் தற்போது அட்லி தயாரிக்க, காளீஸ் இயக்கத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்க 'பேபி ஜான்' என்ற பெயரில் ஹிந்தியில் தயாராகி வருகிறது.
எட்டு வருடங்களுக்கு முன்பு யூ டியுபில் வெளியான 'தெறி' டீசர் மொத்தமாக 13 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பேபி ஜான்' டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியானது. 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை அந்த டீசர் பெற்றுள்ளது.
ஒரிஜனல் படமான 'தெறி' டீசர் ஒட்டு மொத்தமாக பெற்ற பார்வைகளை அதன் ஹிந்தி டீசர் ஒரே நாளில் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது 26 மில்லியன் பார்வைகளை அந்த டீசர் பெற்றுள்ளது. அதனால், தமிழில் பெற்ற வெற்றியைப் போலவே ஹிந்தியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.