Advertisement

சிறப்புச்செய்திகள்

2025 மார்ச்சில் சூர்யா 44வது படம் ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜ் | சாய் பல்லவியின் 10 நிமிட நடிப்பு என் இதயத்தை வென்று விட்டது : ஜோதிகா | சூர்யா 45வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | பில்லாவுக்கு பிறகு குட் பேட் அக்லியில் மாறுபட்ட அஜித் : ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் | 'தெறி' டீசர் சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'தெறி' ஹிந்தி டீசர் | பாலிவுட் வாரிசுகள் நடிக்கும் 'ஆசாத்' | அல்லு அர்ஜுன் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி | நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… | ஏழை மக்களை கவுரவித்த மீனாட்சி சேஷாத்ரி, ராகுல் ராய், தீபக் திஜோரி | பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு அர்ஜுன் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி

06 நவ, 2024 - 02:45 IST
எழுத்தின் அளவு:
Nandyal-Controversy:-Big-relief-for-Allu-Arjun


தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்ளில் ஒருவர் அல்லு அர்ஜுன். கடந்த மே மாதம் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது அவர் நந்தியால் தொகுதியில் அவருடைய நண்பர் சில்ப ரவி சந்திர கிஷோர் தெட்டி என்பவருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நந்தியால் ஊரில் உள்ள சில்ப ரவி இல்லத்தில் பெரும் கூட்டமாக மக்கள் திரண்டனர்.

அதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இருந்த சூழ்நிலையிலும் போலீஸார் அல்லு அர்ஜுனுக்கு பாதுகாப்பு வழங்கினர். அவர் சென்ற பிறகு சிலர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தனர். அதையடுத்து அல்லு அர்ஜுன் மீதும், சில்ப ரவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அல்லு அர்ஜுன், சில்ப ரவி ஆகியோர் முறையிட்டனர். கடந்த மாதம் இது குறித்து விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இன்று அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

நந்தியால் தொகுதியில் சில்ப ரவி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அவருக்காக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை அப்போது கடுமையாக விமர்சித்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் தான் அல்லு அர்ஜுன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு…நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… 'தெறி' டீசர் சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'தெறி' ஹிந்தி டீசர் 'தெறி' டீசர் சாதனையை ஒரே நாளில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)