பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
2024 தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', ஜெயம் ரவி நடித்த 'பிரதர்', கவின் நடித்த 'பிளடி பெக்கர்' ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வந்த 'லக்கி பாஸ்கர்' படமும் வெளியாகின.
துல்கர் சல்மானுக்கு தமிழில் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. இந்த 'லக்கி பாஸ்கர்' படமும் நன்றாக இருப்பதால் அப்படத்திற்கான வசூலும் தமிழில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் படத்துக்கு அடுத்து வசூல் ரீதியாக 'லக்கி பாஸ்கர்' படம்தான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாம். தற்போது கூடுதல் தியேட்டர்களும் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டு வருகிறது.
'பிரதர், பிளடி பெக்கர்' இரண்டு படங்களுக்கும் மிகச் சுமாரான வரவேற்புதான் கிடைத்துள்ளது. விடுமுறை தினங்கள் என்பதால் சிலர் இந்தப் படங்களைப் பார்த்து வருகிறார்கள். இப்படங்கள் சிறப்பாக இல்லாத காரணத்தாலும், விமர்சனங்கள் பாராட்டுக்களாக இல்லாத காரணத்தாலும் வசூல் பாதிப்படைந்துள்ளது. அதனால், டப்பிங் படமான 'லக்கி பாஸ்கர்' படத்துடன் கூட போட்டி போட முடியாமல் மிகவும் பின் தங்கிவிட்டன.