Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லை மீறிப் போகும் அஜித் ரசிகர்கள்: குவியும் கண்டனங்கள்

03 நவ, 2024 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Ajith-fans-going-overboard:-Condemnations-pile-up


தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் போடும் சண்டை பற்றி அனைவரும் அறிந்ததே. கடந்த சில வருடங்களாகவே அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு அவற்றை சாக்கடை ஆக மாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு தாங்களும் சிறிதும் குறையில்லை என ரஜினி, கமல் ஆகியோரது மூத்த வயதுடைய ரசிகர்களும் செய்து வருகிறார்கள்.

இதில் அஜித் ரசிகர்கள் சில சமயங்களில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் எரிச்சலைத் தருவதாக அமைந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு 2021ல் இந்தியப் பிரதமர் மோடி சென்னை வந்த போது கூட 'வலிமை அப்டேட் வேண்டும்' என கூச்சலிட்டனர் அவரது ரசிகர்கள். அதே வருடம் சென்னையில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்த போதும் 'வலிமை அப்டேட்' என கூச்சல் போட்டனர். அதற்கடுத்து அஜித் நடித்த படங்களின் போதும் அடிக்கடி 'அப்டேட் அப்டேட்' எனக் கேட்டு எரிச்சலூட்டினர்.

கடந்த சில வாரங்களாக பல பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' எனக் கூக்குரலிட்டு அடுத்த கட்ட எரிச்சலை ஆரம்பித்துள்ளார்கள். தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த 'அமரன்' படத்திலும் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் 'கடவுளே அஜித்தே' எனக் கத்துவதாக செய்திகள் வந்துள்ளன. இந்திய ராணுவத்தில் மேஜர் ஆகப் பதவி வகித்து, தீவிரவாதிகளைக் கொன்று வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறுதான் 'அமரன்' படம்.

அப்படிப்பட்ட ஒருவரது தேசப்பற்றையும், வீரத்தையும் பெருமைப்படுத்தி வந்துள்ள படம் தியேட்டர்களில் ஆரம்பமாகும் போது 'கடவுளே அஜித்தே' எனக் கத்துவதாகவும், கிளைமாக்ஸ் காட்சியில் முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் வீர மரணம் அடையும் காட்சியிலும் கூட 'கடவுளே அஜித்தே' எனக் கத்தி படம் பார்ப்பவர்களை கோபப்பட வைப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

ஒரு தேசப்பற்று படத்தில் கூடவா இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமாகக் கூச்சலிடுவது என பலரும் புலம்புகிறார்கள். இது குறித்து அஜித் உடனடியாக அவரது ரசிகர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் அவரது பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'விஜய் 69'  சிறிய பட்ஜெட் படமா ? இப்படி ஒரு தகவல் !!'விஜய் 69' சிறிய பட்ஜெட் படமா ? ... 'கங்குவா' படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி கிடைக்குமா ? 'கங்குவா' படத்திற்கு அதிகாலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
04 நவ, 2024 - 10:11 Report Abuse
BalaG இவர்களே அடுத்த அஜித், சிவகார்த்திகேயன் போட்டி ஆரம்பிப்பாங்க. இது சிவகார்த்திகேயன்-க்கு நல்ல விஷயம்தான்
Rate this:
vijay - coimbatore,இந்தியா
03 நவ, 2024 - 08:11 Report Abuse
vijay எனக்கு தெரிஞ்சு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் இந்த "அப்டேட்" விஷயத்தில் வெறியர்களாக உணருகிறேன். அஜித் விஜய்யை காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாக படங்கள் தருவது கூட ஒரு வியாபார தந்திரமாக இருக்கலாம். ஒரே படத்திற்கு இரண்டு வருடமாக காத்திருக்கவைத்திருப்பது ஒரு வியாபார நுட்பம், ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி. ரசிகர்களும் மண்டைக்குள் மசாலா இல்லாதவர்கள் என்று யார் சொல்லியும் தெரியதெவை இல்லை. மண்டைக்குள்ள அப்டேட் பண்ணி, படிப்பு வேலை என்று இல்லாமல் இப்படி இருந்தால் எப்படி. என்ன ஜென்மங்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)