'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவர் மீது கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டு பதிவாகி பரபரப்பானது. மைனர் நடனப் பெண் ஒருவரை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக 'போக்சோ' சட்டத்தில் கைதானார்.
கைது செய்யப்பட்ட பின்பு ஜாமின் வழங்கக் கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்று அவருக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ஜாமின் வழஙகியுள்ளது. நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சன்ச்சலகுடா சிறையில் இருக்கும் அவர் நாளை அக்டோபர் 25ம் தேதி விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சமீபத்தில் தேசிய விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமின் பெற்றார் ஜானி. ஆனால், தேசிய விருது தேர்வு குழு அவருடைய தேசிய விருதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதனால், டெல்லி சென்று அவரால் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமின் என்பது 'நிபந்தனை ஜாமின்'. அவரோ, அவருடைய குடும்பத்தினரோ புகார் அளித்தவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் 'நிபந்தனை ஜாமின்' வழங்கப்பட்டுள்ளது.