சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
கடந்த வருடம் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் துணிச்சலாக வெளிவந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ஆனால் ஆச்சரியமாக பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது கர்நாடகாவை சேர்ந்த ஆண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி அதிர்ச்சி அளித்தார்.
12 வருடங்களுக்கு முன்பு தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை பெங்களூருவில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு வர சொன்ன இயக்குனர் ரஞ்சித் அங்கே தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியும் வைத்தார் என்று தனது குற்றச்சாட்டில் கூறியிருந்தார். முதலில் கேரளாவில் இது குறித்து இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் பின்னர் அது கர்நாடகா காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது புகார் அளித்திருந்த அந்த நபர் கூறுவது அனைத்துமே பொய் என்றும், மேலும் சம்பவம் நடந்த உடனே இயக்குனர் ரஞ்சித் மீது புகார் அளிக்காமல் 12 வருடங்கள் தாமதப்படுத்தியது எதற்காக என்கிற கேள்வியையும் இயக்குனர் ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கபட்டது.
மேலும் தன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த வித முகாந்திரமோ, ஆதாரங்களோ இல்லை எனக் கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.