ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சூர்யா நடிப்பில் வெளிவரும் பிரமாண்ட படம் 'கங்குவா'. பாகுபலி, கேஜிஎப் ஸ்டைலில் பேண்டசி த்ரில்லராக உருவாகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, நட்டி, ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. சூர்யா பிரான்சிஸ், கங்குவா என இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார். ரெண்டிலும் அவர் நடிப்பில், தமிழ் உச்சரிப்பில் என எல்லாவற்றிலும் வித்தியாசங்கள் காட்டி இருக்கிறார். நிகழ்காலத்தில் தொடங்கி, பிளாஷ்பேக்கிற்குள் கதை செல்லும். பிரான்சிஸ் கதாபாத்திரம் நிகழ்காலத்தில் வாழும் ஒரு இளைஞனை பற்றியது, பிரான்சிஸ் கலகலப்பும் துறுதுறுப்புமாக ஜாலியாக இருப்பார். அந்த போர்ஷனில்தான் திஷா பதானி அவரது காதலியாக வருகிறார். பிரான்சிஸ் போர்ஷன் முழுவதும் படமாக்கிய பின்னர்தான் 1500 ஆண்டுக்கு முந்தைய 'கங்குவா' போர்ஷன் படமாக்கப்பட்டது.
'கங்கு' என்றால் நெருப்பு. நெருப்பு பற்றிக்கொண்டால், எப்படி வேண்டுமானாலும் பரவும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் பரவும். அப்படி கட்டுக்கடங்காதவரே கங்குவா. இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. 2024ல் நடக்கும் கதை ஒரு பகுதி. இன்னொரு பகுதி, 1,500 வருஷங்களுக்கு முன்னர், அதாவது எந்தக் காலத்தில் நடந்தது என்று சொல்ல முடியாத காலகட்டத்தில் நிகழும். 'ஏழாம் அறிவு' படத்திற்காக சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருந்தார். தற்போது 'கங்குவா'விற்காக மறுபடியும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.