நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'லக்கி பாஸ்கர்'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வருகிற 31ம் தேதி வெளிவருகிறது. இதனை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேகர், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சுஜானியாக தயாரித்துள்ளனர். 1980களில் நடந்த வங்கி கொள்ளை ஒன்றை அடிப்படையாக வைத்து படம் உருவாகி உள்ளது.
படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசியதாவது: நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் படம் 'லக்கி பாஸ்கர்' வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதை சுற்றி கதை இருக்கும். இப்போது என் உடல்நிலை சரியாகி இருப்பதால் இந்தப் படத்திற்கும் டப்பிங் கொடுத்திருக்கிறேன். ரிலீஸின் போது நிச்சயம் படத்தில் என் குரல் இருக்கும்.
பாஸ்கர் வாழ்க்கையில் முக்கியமான பங்கு மீனாட்சி சவுத்ரிக்கு உண்டு. படம் முழுக்க வருகிறார். எனது மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வயதில் மிகவும் திறமையான நடிகராக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் படம் என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. என்றார்.