வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
திராவிட இயக்க படைப்பாளர்களில் முக்கியமானவர் பாரதிதாசன். திரைப்படங்களில் உணர்ச்சியூட்டும் பல பாடல்களை எழுதி உள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அவர் முதன் முதலாக பாடல் எழுதியது 'ஸ்ரீராமானுஜர்' என்ற பக்தி படத்திற்கு. ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அவர் பாடல்கள் எழுதிய 'பாலாமணி அல்லது பக்கா திருடன்' என்ற படம் வெளிவந்து அதுவே முதல் படமானது.
'பக்கா திருடன்' ஒரு துப்பறியும் படம். ஒரு பணக்கார வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது அவளையும், அவள் வருங்கால கணவனையும் யாரோ கடத்தி சென்று ஒரு குகைக்குள் அடைத்து வைக்கிறார்கள். வருங்கால கணவன் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடுகிறான். அந்த பெண்ணும் தப்பி வரும்போது இறந்து கிடந்த ஒரு குழந்தையை எடுத்து அதை முறைப்படி புதைக்க முயற்சிக்கும்போது குழந்தையை கொன்றதாக அவள் கைது செய்யப்படுகிறாள். படத்தின் நாயகனான துப்பறியும் நிபுணர் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.
'பாலாமணி' படத்தை பி.வி.ராவ் என்பவர் இயக்கி இருந்தார், டி.எஸ்.ஜெயா பாலாமணியாகவும், எஸ்.வி.சகஸ்ரநாமம் துப்பறிவாளராகவும் நடித்திருந்தார்கள், ஸ்ரீராமானுஜர், பாலாமணி இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.