Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

37 வருடங்கள் கழித்து டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ஆவநாழி

22 அக், 2024 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Mammoottys-Aavanazhi-is-getting-a-digital-re-release-after-37-years


பிரபல ஹீரோக்கள் நடித்து பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட்டான படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது தொடர்ந்து வாடிக்கையாகிவிட்டது. தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட மணிசித்திரதாழ், ஸ்படிகம், தேவதூதன் உள்ளிட்ட சில படங்கள் இது போன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது மம்முட்டி நடிப்பில் கடந்த 1986ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆவநாழி திரைப்படம் தற்போது 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இயக்குனர் ஐ.வி சசி இயக்கிய இந்த படத்தில் கதாநாயகிகளாக கீதா மற்றும் நளினி ஆகியோர் நடித்திருந்தனர். மலையாள திரையுலகில் 20 திரையரங்குகளில் தொடர்ந்து 25 நாட்கள் ஓடிய இந்த திரைப்படம் 100 நாள் வெற்றி படமாகவும் அமைந்தது. போலீஸுக்கும் அரசியல்வாதிக்குமான மோதல் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 1987ல் தமிழில் நடிகர் கமல்ஹாசன், சந்தான பாரதி இயக்கத்தில் இந்த படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற பெயரில் தயாரித்தார். இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க மலையாளத்தில் நடித்த கீதா மற்றும் நளினி இருவருமே இதிலும் நடித்திருந்தனர். இங்கேயும் இந்தப்படம் வெற்றி பெற்றது.

மேலும் அதே வருடத்தில் தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு நடிப்பில் டெத் சென்டன்ஸ் என்கிற பெயரிலும் ஹிந்தியில் வினோத் கன்னா நடிப்பில் சத்தியமேவ ஜெயதே என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறையில் முதுகு வலியால் அவதிப்படும் நடிகர் தர்ஷன் ; பெங்களூருக்கு மாற்ற கோரிக்கைசிறையில் முதுகு வலியால் அவதிப்படும் ... நடிகைகளுக்கு பாலியல் தொல்லை புகார்: மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது நடிகைகளுக்கு பாலியல் தொல்லை புகார்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)