இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னை சாய் பல்லவி அண்ணா என்று அழைத்ததாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எப்போதுமே டீச்சர் என்றாலே மாணவர்கள் எல்லாம் தெறிச்சு ஓடுவாங்க. ஆனா மலர் டீச்சருக்கு கிடைச்ச மரியாதையை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதோடு அவர் நடிச்ச பிரேமம் படத்தை பார்த்த பிறகு நானும் அவரோட ரசிகன் ஆயிட்டேன்.
ஒருநாள் சாய் பல்லவியோட மொபைல் நம்பர வாங்கி அவரிடத்தில் பேசினேன். ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கீங்க. அறிமுகக் காட்சியும் கிளைமாக்ஸும் சூப்பரா இருக்குன்னு சொன்னேன். அதற்கு சாய் பல்லவி, ரொம்ப நன்றி அண்ணா என்று சொன்னார். அதை கேட்டு செம கடுப்பாயிட்டேன். நிறுத்துமா, மலர் டீச்சர்கிட்ட பேசுவது மாதிரி நான் பேசுறேன். நீங்க ஏன் சாய் பல்லவி மாதிரி பேசுறீங்க. அண்ணான்னு மட்டும் அழைக்காதீங்க. ஏன்னா என்னைக்காவது ஒருநாள் நாம சேர்ந்து நடிப்போம்ன்னு அவர்கிட்ட சொன்னேன். அப்படி அப்போ சாய் பல்லவிகிட்ட நான் சொன்னது இப்போ இந்த அமரன் படம் மூலமா நிறைவேறி இருக்குன்னு சொன்ன சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு சிறந்த நடிகையா உயர்த்தி கொண்டே வருகிறார். அவர் ஒரு பிராண்ட் நடிகை என்றும் கூறினார்.