பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
1978ம் ஆண்டு வெளியான 'பைரவி' படத்தில் ரஜினி சோலோ ஹீரோவாக நடித்தார். அந்த படங்களின் விளம்பரங்களில் அப்போது விநியோகஸ்தராக இருந்த தயாரிப்பாளர் தாணு தனது விளம்பரங்களில் ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் கொடுத்து விளம்பரம் செய்தார். தியேட்டரில் வாசலில் ரஜினிக்கு 50 அடி உயர கட் அவுட் வைத்தார்.
அதற்கு பிறகு ரஜினி நடித்த படங்களின் விளம்பரத்தில் ஆங்காங்கே சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் 1980ம் ஆண்டு வெளிவந்த 'நான் போட்ட சவால்' என்ற படத்தின் டைட்டில் கார்டில்தான் முதன் முறையாக 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை போட்டார்கள். சென்சார் சான்றிதழ் முடிந்த உடனேயே ரஜினி ஸ்டைலாக நடந்து வரும்போது பல வண்ண எழுத்துக்களில் சூப்பர் ஸ்டார் என்று பல முறை இடம்பெறச் செய்து பிறகே ரஜினி என்று குறிப்பிட்டார்கள்.
இந்த படத்தை புரட்சிதாசன் என்பவர் இயக்கினார். ரஜினி ஜோடியாக ரீனா நடித்திருந்தார். எம்.ஆர்.ராதா தலைமையிலான வில்லன் கூட்டம் தங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதியை கொல்கிறது. நீதிபதியின் மகன்கள் தப்பிக்கிறார்கள். அவர்களில் மூத்தவரான ரஜினி வளர்ந்து தந்தையை கொன்றவர்களை பழிவாங்க கிளம்புகிறார். தம்பியான மனோஜ் என்ற நடிகர் போலீஸ் அதிகாரியாகி அண்ணனை பிடிக்க கிளம்புகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் வெற்றி பெறவில்லை.