தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை வசீகரித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் தொடர்ந்து முன்னணி நட்சத்திரமாக நடித்து வரும் அவர் தமிழில் அசுரன், துணிவு படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து தற்போது ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ஒரு பக்கம் முன்னாள் கணவர் நடிகர் திலீப்புடனான விவாகரத்து, அதன் பிறகு தனது மகள் மீனாட்சியின் பாராமுகம் என பெர்சனலாக பல பாதிப்புகள் அவரை சூழ்ந்து இருந்தாலும் எப்போதும் தாமரை போல் மலர்ந்த முகத்துடன் எதில் இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் பெண்ணாகவே வலம் வருகிறார் மஞ்சு வாரியர்.
இப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வெளியில் இருந்து எந்த உதவியையும் தேட வேண்டாம் நமக்குள்ளேயே அது இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சு வாரியர். இதுபற்றி அவர் கூறும்போது, “சந்தோஷத்தை எதிலும் தேட வேண்டாம். ஏதோ சில விஷயங்களை கேட்கும்போதும் பார்க்கும்போதும் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நீங்களாகவே உங்களுக்குள் சந்தோஷத்தை கொண்டு வர முடியும். சந்தோஷத்தை உணர்வதற்காக வெளியில் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். அது தேவையானதும் அல்ல. நான் தனியாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் கூட நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். அது சரியா தவறா என்பது எனக்கு தெரியாது. நான் விரும்பும் வரை எந்த வேலையும் செய்யாமல் என்னால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.