கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனது துள்ளலான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். அதனால் மலையாளத்தையும் தாண்டி தன் தந்தையை போலவே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியுள்ள துல்கர் சல்மான் ஒவ்வொரு மொழியிலும் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த கிங் ஆப் கொத்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் துல்கர் சல்மான்.
அவர் தமிழில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. இது திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் எதனால் இந்த இடைவெளி என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
“படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் என் உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறிவிட்டேன். சில உடல் நல குறைபாடுகள் காரணமாகத்தான் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி விட்டுள்ளேன். இது யாருடைய தவறும் அல்ல. எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது. அவ்வளவுதான்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.