2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

2024ம் ஆண்டில் அடுத்த பெரிய வெளியீடாக சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படம் மட்டுமே இருக்கலாம். அதற்கு முன்பு இந்த மாதக் கடைசியில் தீபாவளி படங்களாக 'அமரன், பிரதர், ப்ளடி பெக்கர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. டிசம்பர் மாதத் துவக்கத்தில் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி 'புஷ்பா 2' வர உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் சில படங்கள் வர வாய்ப்பிருந்தாலும், அவை முன்னணி நடிகர்களின் படங்களாக இருக்காது. அவற்றோடு இந்த ஆண்டின் வெளியீடுகள் முடிவடையலாம்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வரப் போகிறது என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் தற்போது நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படம் பொங்கல் வெளியீடு என்று அறிவித்தார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆரம்பமான அஜித்தின் 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. அப்படி வந்தால், 'குட் பேட் அக்லி' தள்ளிப் போகலாம்.
கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' படம், விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள தெலுங்குப் படமான 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். இப்படத்தைத் தமிழிலும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருப்பார்கள். இப்படம் மூலம் 'இந்தியன் 2' மூலம் இழந்த பெருமையை இங்கு பெற முயற்சிப்பார் ஷங்கர்.
அஜித்தின் 'விடாமுயற்சி' அல்லது ‛குட் பேட் அக்லி' படம் பொங்கலுக்கு வெளிவந்தால் அதற்குத்தான் அதிகத் தியேட்டர்கள் கிடைக்கும். அப்படியிருக்க மற்ற நேரடி தமிழ்ப் படங்களுக்கும் ஓரளவுக்காவது தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இப்போதைய நிலவரப்படி இந்தப் படங்களில் எந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பது அடுத்த மாதத்திற்குள் தெரிந்துவிடும்.