லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் அக்டோபர் 10ம் தேதி வெளியான படம் 'வேட்டையன்'. இப்படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்தாலும் கோலிவுட் வட்டாரங்களில் இப்படத்தின் வசூல் பற்றி சில தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூலும் சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இன்றைய வசூலுடன் சேர்த்தால் முதல் வார இறுதி நாட்களுடன் சேர்த்து 200 கோடி ரூபாய் வசூலை நிச்சயம் கடக்கும் என்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்லாது இதர தென்னிந்திய மாநிலங்களிலும் இப்படத்தின் வசூல் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.