கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தெலுங்கில் உருவாகி வரும் படம் ‛கேம் சேஞ்சர்'. மிகவும் எதிர்பார்த்த இந்தியன் 2 படம் அவருக்கு கை கொடுக்காத நிலையில் இந்த கேம் சேஞ்சர் படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் ஷங்கர். மேலும் இந்த படத்தை தயாரிப்பவர் தெலுங்கு திரையரங்கின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ. இந்த படம் 2025ல் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தை பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியிடுவதற்கான பணிகளில் இப்போதே இறங்கி விட்டார் தில் ராஜூ.
குறிப்பாக இப்படிப் பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகும் படத்திற்கு எல்லா மொழிகளிலும் ஒரே டைட்டில் இருந்தால் படத்தின் வெற்றிக்கும் வியாபாரத்திற்கும் அது மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ள தில் ராஜு மற்ற மொழிகளிலும் இதே டைட்டிலை கைப்பற்றுவதற்கு கடும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் ஒரு மொழியில் இந்த படத்தின் டைட்டிலை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு வைத்திருப்பதை அறிந்து அவர்களிடம் பேசி அதை கைப்பற்றி உள்ளதாக கூறியுள்ள தில் ராஜூ மற்ற மொழிகளிலும் இந்த டைட்டில் பிரச்சனை இல்லாமல் சமூகமாக முடிவுக்கு வந்ததும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.