இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'தி கோட்' படத்திற்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள பையனூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான கதை கமல்ஹாசனுக்கு உருவாக்கப்பட்டது என்றும், அந்த படம் ட்ராப் செய்யப்பட்டதால் பின்னர் விஜய்க்காக அதே கதையில் பல திருத்தங்களை செய்து தற்போது எச்.வினோத் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதில், கடந்த ஆண்டில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான 'பகவன்த் கேசரி' என்ற படத்தின் ரீமேக்கில் விஜய் 69வது படம் உருவாகி வருவதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரியவில்லை.