லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருடன் நடித்தவர் அண்ணன் சக்கரபாணி. தம்பியின் உயர்வு ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர். எம்.ஜி.ஆரும் தன் தாய்க்கு பிறகு அண்ணனைத்தான் தெய்வமாக வணங்கினார். பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய நட்சத்திரமாக மாறியபோதும் எல்லா வரவு செலவுகளையும் பார்த்துக் கொண்டவர் சக்கரபாணி. இதனால் சினிமாவில் சக்கரபாணியை 'பெரியவர்' என்றும் எம்ஜிஆரை 'சின்னவர்' என்றும் அழைப்பார்கள்.
இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆரம்ப கால கட்டத்தில் இருவரும் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் முழுமையான கேரக்டராக இணைந்து நடித்தது 'இரு சகோதரர்கள்' படத்தில்தான். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையாவின் நண்பராக நடித்தார். சக்கரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
1936ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், டி.எஸ்.பாலையா, எஸ்.என்.விஜயலட்சுமி, ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு இடையில் வரும் மோதலும், கூடலும்தான் கதை.